பூந்தமல்லி தனி கிளை சிறையில் செல்போன், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் எதிரொலி, துணைச் ஜெயிலர் உட்பட ஐந்து போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்
பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது கைதிகளின் அறையில் இருந்து 2 ஸ்மார்ட் போன் உள்ளிட்ட 5 செல்போன் பணம் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை செய்து வரும் நிலையில் துணை ஜெயிலர் செல்வராஜ், உதவி ஜெயிலர் ஜேம்ஸ் பிரிட்டோ, முதல் நிலை தலைமை காவலர் உதயகுமார், மாரி செல்வம் உள்ளிட்ட 5 பேரை சிறைத்துறை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உள்ளதாகவும், மேலும் சிறையில் அதிகளவில் பணம் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இந்த சிறையில் இருப்பதும் வேற ஏதேனும் சதி திட்டத்திற்கு இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.