அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்த பா.ஜ.க. சார்பில் குழு அமைத்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தஞ்சாவூரில் பள்ளி நிர்வாகம் தந்த தொல்லைகள் தொடர்பாகவும் மாணவி தற்கொலை செய்துக் கொண்டது மிகுந்த வேதனை தருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை தர நான்கு பேர் கொண்ட குழுவை கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா அமைத்துள்ளார். அதன்படி, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தியா ராய் எம்.பி., தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விஜயசாந்தி, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சித்ரா தை வாக், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கீதா விவேகானந்தா உள்ளிட்டோர் குழு இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.