திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனைவிக்காகக் சந்தித்து பேசுகையில், ''பொய் பேசுவதில் போட்டி வைத்தால் ஆளுநர் ஆர்.என்.ரவியை தாண்ட முடியாது. முதல்நாள் ஒன்றை பேசுகிறார். மறுநாள் மறுத்து பேசுகிறார். முதல் நாள் ஒன்றை சொல்லுகிறார். மறுநாள் அதற்கு இல்லை என்று மறுத்து பேசுகிறார். அவர் கடைசியில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ அதை ஆமோதித்து பேசவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. காரணம் அவர் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தார். நான் கூட கூட்டத்திலே சொன்னேன் அரண்மனையில் இருக்கின்ற பிறவிகள் வாயை பொத்திக் கொண்டு இருக்க வேண்டும். ரொம்ப அதிகமாக சத்தம் போடக்கூடாது. அரண்மனை பிறவியே வாயை அடக்கு என்று கலைஞர் சொன்னார்.
தமிழ்நாட்டிலேயே தமிழை அழித்துவிடலாம் என்று நினைப்பில் பேச ஆரம்பித்தவர், கடைசியில் இந்தியால் தமிழை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசுகின்ற நிலைமைக்கு வந்திருக்கிறார் என்றால் அவர்தான் மூக்கறுப்பட்டு போயிருக்கிறார். அதுபோல் இன்னொரு பக்கத்தில் அண்ணாமலை தினம் ஒன்று பேசுகிறார். அவர் யாரைப் பற்றிதான் பேசுகிறார் என்று தெரியவில்லை. அவரால் எதையும் நிரூபிக்க முடியாது. மொத்தத்தில் திமுக ஆட்சி, திராவிடம் மாடல் ஆட்சி வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் செல்வாக்கு இருக்கிறது. மக்களின் ஆதரவு இருக்கிறது. முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார். அதில் வெற்றியும் பெற்று வருகிறார்'' என்றார்.