Skip to main content

6 லட்சத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு...!! சென்னையில் இன்றும் அதிக கரோனா தொற்று பதிவு!! 

Published on 28/09/2020 | Edited on 30/09/2020

 

today corona rate in tamilnadu

 

தமிழகத்தில் இன்று மேலும் 5,589 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில், 5,577 பேர் தமிழ்நாட்டையும், மற்றவர்கள் பிற மாநிலம் மற்றும் பிற நாடுகளிலிருந்தும் வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,86,397 ஆக உயர்ந்து, 6 லட்சத்தை நெருங்கி வருகிறது. அதேபோல் 46,306 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,283 ஆக பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் 5 வது நாளாக 1,000-க்கும் மேலாக கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,64,744 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில், ஒரே நாளில் 78,614 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 5,554  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,30,708  ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 70 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 9,383 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 3,179 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் 4,306 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Ad


தொடர்ந்து சில நாட்களாகவே கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கோவையில் அதிகரித்து வரும் நிலையில், இன்றும் கோவையில் ஒரே நாளில் 587 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சேலத்தில் 258 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்