அனைத்து வகையான நோய்களும் தமிழகத்தில் உள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள புதிய மாங்கனி அரங்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், அனைத்து வகையான நோய்களும் தமிழகத்தில் உள்ளது. சுகாதார துறை அமைச்சரோ குட்கா விற்பனையில் கவனம் செலுத்துகிறார்.
மின் மிகை மாநிலம் என கூறுகின்றனர். ஆனால் மின் வெட்டு தொடர்கிறது. அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. அரசு தோல்வி அடைந்து விட்டது இதனால் அரசு நீடிக்க கூடாது உடனடியாக பதவி விலக வேண்டும். பினாமி அரசு இம்மாத இறுதிக்குள் கவிழும்.
எம்எல்ஏ பதவி நீக்க வழக்கு விசாரணைக்கு வருகிறது. மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் கூறும் தீர்ப்பு எடப்பாடி அரசுக்கு எதிராக இருக்கும். எனவே பினாமி அரசு நிச்சயமாக கவிழும். தீர்ப்பு வந்த உடன் ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். அரசுக்கு துணை போக கூடாது.
அரசின் மீது தொடர்ந்து வரும் ஊழல் குற்றசாட்டிற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. 2018ல் மட்டும் 15 வகையான ஊழல் நடந்ததாக புள்ளிவிவர ஆதாரத்தோடு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பாமக ஆளுனரிடம் முறையிடும் என்றார்.