Published on 24/01/2022 | Edited on 24/01/2022

தமிழகத்தில் சமீபகாலமாக கடத்தலில் ஈடுபட்டு விமான நிலையத்தில் சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டுப் பணத்துடன் ஒருவர் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று துபாயில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு பயணி கொண்டு வந்த உடைமையில் 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களும், 50ஆயிரம் சவுதி அரேபியா ரியால் கரன்சியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 13 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.