பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமை முடிவு எடுக்கும் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அதிகார்ப்பூர்வமான நாளேடான ’நமது புரட்சித் தலைவி அம்மா’வில் திமுக நடத்தும் போராட்டங்கள் காவேரிக்காக அல்ல; மத்திய மாநில அரசுகளின் ஒற்றுமையை சீர்குலைக்கவே எனும் தலைப்பில் எழுதப்பட்டுல்ல கட்டுரையில், எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அதிமுக - பாஜக உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய, மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர்குலைக்க முடியாது.
இந்திய அரசியலில் அதிமுகவும் - பாஜகவும் இரட்டை குழல் துப்பக்கியாக செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டது. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணதிட்டத்தை இரண்டு கட்சிகளின் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாகும் என அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து இன்று காலை சென்னை விமான நிலையலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமை முடிவு எடுக்கும். தமிழகத்தில் இரட்டைக்குழல் துப்பாக்கி எல்லாம் இல்லை; ஒரு குழல் துப்பாக்கிதான் இருக்கிறது. துப்பாக்கியில் இருந்து சுட்டால் ஒரு குண்டுதான் வரும், இரண்டு குண்டு எல்லாம் வராது என அவர் கூறியுள்ளார்.