திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் உள்ள விடுதிகள் மற்றும் தனி வீடுகளில் வைத்து வெளிமாநிலத்தில் இருந்து அழகான இளம்பெண்களை அழைத்துவந்து விபச்சாரம் செய்கிறார்கள் என்கிற தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அதோடு ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், குடியாத்தம் பகுதிகளுக்கும் பெண்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுப்பற்றிய தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்றது. அதனை தொடர்ந்து போலீஸார் ரகசியமாக விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்தவரும், அதிமுகவின் மாவட்ட பிரதிநிதியாகவும் உள்ள உமராபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரான பிரேமா என்பவர் தான், இளம்பெண்களை அழைத்து வந்து தொழில் செய்கிறார் என அறிந்தனர்.
உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி பொறி வைத்து பிரேமாவை ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.