
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாரதி (28). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியபிரியா (27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்து 10 ஆண்டு ஆன பின்னும் குழந்தை இல்லாமல், தற்போது சாரதியின் மனைவி சத்தியபிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி அங்குள்ள விவசாய நிலத்தில் மோட்டார் கொட்டகை கட்டுவதற்காக செண்ட்ரிங் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, தான் வைத்திருந்த இரும்புகம்பி, மேலே சென்ற உயரழுத்த மின்கம்பியில் பட்டி உரசியுள்ளது. இதில் சாரதி மீது மின்சாரம் தாக்கியது. இந்த சம்பவத்தை கண்ட அங்கிருந்தவர்கள், சாரதியை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சாரதி, நேற்று முன்தினம் (29-05-24) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, அவரது உடல் சாரதியின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு நேற்று காலையில் நடைபெற்றுகொண்டிருந்தது. அப்போது, சாரதியின் மனைவிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டதில், அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், சத்தியபிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த வந்த சாரதிக்கு, அவரது இறுதிசடங்கின் போது ஆண் குழந்தை பிறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.