மலையாள பட உலகில் முன்னணி நடிகையாகவும், குடும்ப ஸ்தீாி பெண்கள் அமைப்பின் தலைவியாகவும் இருந்து வருபவா் மஞ்சுவாாியா். இவா் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வயநாடு பனைமரத்து பஞ்சாயத்து பரகூணி கிராம ஆதிவாசி குடும்பத்தை சோ்ந்த 57 குடும்பங்களுக்கு மஞ்சுவாாியா் பவுண்டேசன் சாா்பில் 1 கோடியே 75 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டி கொடுப்பதாக உறுதி கூறினாா்.
இது சம்மந்தமாக வயநாடு மாவட்ட கலெக்டா், ஆதி திராவிடா் நலத்துறை செயலாளா் மற்றும் பனைமரம் பஞ்சாயத்து தலைவா் ஆகியோருக்கு கடிதம் மூலமும் இதை தொிவித்திருந்தாா். ஆனால் மஞ்சுவாாியா் கூறியபடி இரண்டு ஆண்டுகளாகியும் அவா்களுக்கு வீடு கட்டி கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அந்த மக்கள் எங்களுக்கு வீடு ஆசையை தூண்டி விட்டு ஏமாற்றியதாகவும் மேலும் வீடுகட்டி தருவதாகவும் கூறியதன் அடிப்படையில் சமூகத்தினாின் நற்பெயரை பெற்றுள்ளாா்.
இதனால் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி இலவச சட்ட உதவி மையத்தில் புகாா் கொடுத்தனா். அதன் போில் இலவச சட்ட உதவி மையத்தில் நோில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி மஞ்சுவாாியருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது. இதில் மூன்றுமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவா் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.
இச்சம்பவம் தற்போது கேரளாவில் காட்டுத்தீ போல் பரவியுள்ள நிலையில் மஞ்சுவாாியா் அந்த கிராம மக்களுக்கு இதுவரை 3 லட்சம் செலவு செய்துள்ளேன். இதில் அரசும் 10 லட்சம் ருபாய் நிதி தருவதாகவும் கூறியது ஆனால் அரசு தரவில்லை. இதனால் அவா்களுக்கு வீடு கட்டி கொடுப்பதில் காலதாமதம் ஆகிறது. மேலும் என்னுடைய பெயரையும் வேண்டுமென்றே அசிங்கப்படுத்துகிறாா்கள் என குற்றம் சாட்டியுள்ளாா்.
இந்நிலையில் இலவச சட்ட உதவிமையம் அந்த மக்களிடம் நீதிமன்றத்தை நாட கூறியுள்ளதையடுத்து ஆதிவாசி மக்கள் நீதிமன்றத்தில் மஞ்சுவாாியா் மீது வழக்குத்தொடுக்க முடிவு செய்துள்ளனா்.