Skip to main content

'பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை மசோதா'-சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

Published on 11/01/2025 | Edited on 11/01/2025
'Additional Protection of Women Bill'-passed in Assembly

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிமுக 'யார் அந்த சார்?' என்ற பேஜுடன் வந்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (10/01/2025) சட்டப்பேரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்க செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த திருத்த மசோதாவில் பாலியல் வழக்குகளில் சிக்கினால் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டங்களை கடுமையாக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'பெண்களை பின்தொடர்ந்தால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை; பாலியல் குற்றங்களுக்கு பிணையில் விடுவிக்காத படி சிறை; குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை; பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை;  பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்க வழி வகை செய்தல்; மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை; ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை' என பல்வேறு அம்சங்களை கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று (11/01/2025) இந்த மசோதாவானது சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்