Published on 12/05/2019 | Edited on 12/05/2019
திருப்பரங்குன்றம், அவரக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மே 19 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் பிரச்சாரங்களை தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில்,

மதுரை பழங்காநத்தத்தில் தனியார் ஓட்டலில் தங்க தமிழ்ச்செல்வன் தங்கியுள்ள அறையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
தற்போது அவர் தங்கியுள்ள அறையில் தேர்தல் பறக்கும் படையினர் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் என வந்த புகாரின் பேரில் தங்க தமிழ்ச்செல்வன் அறையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது.