இந்திய விமானி அபிநந்தன் தாயகம் திரும்பியதை தொடர்ந்து நாகூர் தர்கா முன்பு பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய எல்லைக்குள் புதன்கிழமை அன்று நுழைந்து தாக்குதல் தொடுக்க முயன்றபோது இந்திய விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் அபிநந்தன், பாரசூட் மூலம் தரையிறங்கிய போது, அவரை பாகிஸ்தான் படைகள் பிடித்தனர்.
இதையடுத்து அபிநந்தனை மீட்க இந்திய அரசு நடவடிக்கைகளை தொடங்கியது, அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தான் துணை தூதரிடம் வெளியுறவுத்துறை மற்றும் பல்வேறு உலக நாடுகளும் வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் பிரதமரால் விடுவிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் இன்று இந்திய இராணுவத்தினருடன் ஒப்படைக்கபட்டார்.
அபிநந்தன் தாயகம் திரும்பியதை தொடர்ந்து நாகை அடுத்துள்ள நாகூர் தர்கா முன்பு பொதுமக்கள் கூடி பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். எதிர்காலத்தில் எந்த போர் வந்தாலும் இந்திய ராணுவம் எதிர்த்து போராடி வெற்றிபெறும் என்பது அபிநந்தனின் வீரதீர செயலில் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பெருமிதம் தெரிவித்தனர்.