தரம் உயர்த்தப்பட்ட 19 உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 95 ஆசிரியர்களுக்கு 2023- ஆம் ஆண்டு வரை பணி நீட்டிப்பு வழங்கி தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், "2016- 2017 ஆம் கல்வியாண்டில் 19 நடுநிலைப் பள்ளிகள் அரசு உயர்நிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன. பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 19 பள்ளிகளுக்கு 95 ஆசிரியர் பணியிடம் தற்காலிகமாகத் தோற்றுவிக்கப்பட்டன. ஆசிரியர் பணியிடங்களுக்கு 2023- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது." இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அங்கீகாரம் இல்லாத தனியார் தொடக்கப் பள்ளிகளை மூட தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.