Published on 31/10/2019 | Edited on 31/10/2019
ஏழாவது நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு பிரேக் இன் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மருத்துவ கல்லூரி டீன் உள்ளிட்டோர் மூலம் இந்த பிரேக் இன் நோட்டீஸானது வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவர்களுக்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
பிரேக் இன்சர்வீஸ் நடவடிக்கைக்கு உள்ளானால் அவர்களது பணியிடமானது காலி பணியிடமாக கருதப்பட்டு மாற்று மருத்துவர் நியமனம் செய்யப்படுவார். அதேபோல் இந்த நடவடிக்கையின் கீழ் அரசு மருத்துவர்களின் பணிமூப்பு சலுகையும் ரத்தாகும். பணிக்கு வராத மருத்துவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.