கடந்த ஜனவரி இருபத்தி ஒன்றாம் தேதி சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் மாநகராட்சி ஊழியர்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு அரிசி பையில் இளம் பெண்ணின் வலது கை மற்றும் இரண்டு கால்களும் வெட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையமான பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் ஆல்பின் ராஜ் இளம்பெண்ணின் பாகங்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கினார்..! எந்த ஒரு துப்பு கிடைக்காமல் விசாரணையை தொடங்கிய காவல்துறையினருக்கு கிடைத்த ஒன்று அந்தக் குப்பை சென்னை மாநகராட்சி பத்தாவது மண்டலம் ஆன கோடம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் குப்பை கிடங்கில் இருந்து கொண்டுவரப்பட்ட குப்பை என்பது தெரியவந்தது.
அதன்பேரில் அப்பகுதியில் ஏதேனும் இளம் பெண்கள் காணாமல் போன புகார்கள் அப்பகுதி காவல் நிலையத்தில் பதிவாகி உள்ளதா என்று விசாரணையை தொடங்கினர். ஆனால் சென்னை மாநகர காவல் எல்லையில் வெட்டப்பட்ட நிலையில் கிடைத்த உடல் பாகத்தின் பெண்ணின் வயது சுமார் 35 இருக்கும் என்ற நிலையில் அதுபோன்ற எந்த ஒரு பெண்ணும் சமீபத்தில் காணாமல் போனதாக புகார்கள் எதுவும் பதிவாகவில்லை. போலீசாரின் விசாரணையில் அடுத்த கட்டமாக அந்தப் பெண்ணின் கை மற்றும் கால்களில் குத்தப்பட்டிருந்த சிவன் பார்வதி மற்றும் டிராகன் டாட்டூஸ் எனப்படும் பச்சை குத்தப்பட்டிருந்தது. அதையும் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர் மேலும் உடல் பாகங்கள் கிடைத்த அரிசிப் பையை வைத்து விசாரணை நடத்தினர். அதிலும் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கு சுணக்கம் அடைந்த நிலையில் கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் ஆந்திர மாநிலம் அல்லது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி போலீசார் கொடுத்த தகவலின்பேரில் நாகர்கோவில் மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த ஞாழா என்ற கிராமத்தை சேர்ந்த சந்தியா என்ற பெண் என்ற தகவலை தூத்துக்குடி வடக்கு காவல் ஆய்வாளர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது. அவருக்கு தகவல் அளித்தவர் சந்தியாவுடன் சில காலத்திற்கு முன் நெருக்கமானவர்கள் என்பதும் அவர் கையில் குத்தப்பட்டிருந்த பச்சை வைத்து அவராக இருக்கலாம் என்ற தகவலை அவர்கள் கொடுத்தனர். உடனே ஆய்வாளர் பிரபாகரன் தெற்கு காவல் ஆய்வாளர் சம்பத்திற்கு தகவல் கொடுத்தார். ஆய்வாளர் சம்பத் சென்னை பள்ளிக்கரணை ஆய்வாளர் ஆல்பின் ராஜ்க்கு தகவல் கொடுத்தார். அதன்பிறகு விசாரணையை துவங்கிய போலீசார் கொலை செய்யப்பட்ட சந்தியா என்பதை உறவினர் மூலம் உறுதிப்படுத்தினர்.
இந்த கொலையை செய்தது காதல் கணவர் பாலகிருஷ்ணன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது சந்தியாவின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் மேலும் சந்தியாவுக்கு பல தொடர்புகள் இருந்தது அதை விடும்படி பலமுறை கூறியும் அவர் அதை மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை சுத்தியால் அடித்து கொலை செய்து பிறகு உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் போடப்பட்டதாக சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணன் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் வெட்டப்பட்ட பாகங்களில் வழக்குக்கு மிக முக்கியமானதாக கருதப்படும் தலை இதுவரை கிடைக்காத நிலையில் சந்தியாவின் உடல் பாகங்களை 2மாதம் கழிந்து தற்போது இறுதி சடங்குக்காக உறவினர்களிடம் நாளை ஒப்படைக்க உள்ளது. அதன்படி நாளை மாலை சந்தியாவின் உடல் பாகங்கள் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.