Skip to main content

பிச்சாவரம் கடலில் 672 கடல் ஆமை குஞ்சுகள் விடப்பட்டன!

Published on 16/03/2021 | Edited on 16/03/2021

 

672 sea turtle chicks released in Pichavaram sea

 

கடந்த சில வருடங்களாக பிச்சாவரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் வனத்துறை மூலம் செயற்கை ஆமை முட்டை பொறிப்பகம் அமைக்கப்பட்டது. கடலாமை (ஆலிவ் ரிட்லி) முட்டைகள் சேகரிப்பு செய்து பாதுகாப்பாக பொறிப்பகத்தில் வைத்து முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளி வந்தவுடன் கடலில் விடப்படும். இந்தாண்டு பிச்சாவரம் வனச்சரகம் மூலம் 1,300க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரம் செய்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

 

இவற்றில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 672 ஆமை குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்ததையொட்டி, கடலூர் மாவட்ட வனச்சரக அலுவலர் செல்வம், அதனைக் கடலில் விட உத்தரவிட்டார். அதன்படி பிச்சாவரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் வனக்காப்பாளர்கள் ராஜேஷ்குமார், சரண்யா, அபிராமி, அலமேலு வனக்காவலர்கள் எழிலரசன் மற்றும் ஓட்டுநர் முத்துக்குமரன் வனச்சரகப் பணியாளர்கள் ஆமைகுஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டனர். ஆமை முட்டைகளை நேர்த்தியான முறையில் சேகரிப்பு செய்து பொறிப்பகத்தில் வைத்துப் பாதுகாத்து வருவதால், 95 சதவீதத்துக்கும் மேல் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவருகிறது. இந்த ஆமை குஞ்சுகள் கடலில் மீன் வளத்தை அழிக்கும் ஜெல்லி வகை மீன்களை அழித்து, கடலின் மீன் வளத்தைப் பாதுகாக்கிறது என்று வனச்சரகர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்