Published on 31/03/2021 | Edited on 31/03/2021

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஒருபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சியில் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டை அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்டதாக தேர்தல் பறக்கும் படையினர் தங்க நகையைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.