Published on 16/11/2019 | Edited on 16/11/2019
கரூரில் ஷோபிகா கொசுவலை தயாரிப்பு ஆலையிலிருந்து 32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
![32 crores as bundle... IT raid on mosquito net manufacturing plant](http://image.nakkheeran.in/cdn/farfuture/34JeAXvQiIvruddBJ5iSoDaBztbDFiUSLh67Fn41kJA/1573915882/sites/default/files/inline-images/zz1_11.jpg)
கரூரில் ஷோபிகா கொசுவலை தயாரிப்பு ஆலையில் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில் கணக்கில் வராத 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அந்த கொசுவலை தயாரிப்பு ஆலை உரிமையாளர் சிவசாமியின் வீடு, அலுவலகத்தில் இரண்டாம் நாளாக வருமான வரி சோதனை பெற்றது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் அந்த நிறுவனத்திலிருந்து 32 கோடி ரூபாய் தொகையானது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீரோவில் கட்டுக்கட்டாக 32 கோடி ரூபாய் 2000 மற்றும் 500 நோட்டு கட்டுகளாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.