நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது சேலம் நீதிமன்றம். சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மோகன்ராஜ் சீமானுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மறு உத்தரவு வரும் வரை தினமும் ஓமலூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டார்.
சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொட்டியபுரம் கிராமத்தில் கடந்த மாதம் 12ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டத்திற்கு புறம்பாக நிலம் எடுக்க வருபவர்களை தாக்குமாறு பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பொட்டியபுரம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாகவும் 5 பிரிவுகளின் கீழ் ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இன்று நிபந்தனை முன் ஜீன் வழங்கப்பட்டுள்ளார்.