Skip to main content

விருதுநகர் அருகே கார் விபத்து அரசு அதிகாரிகள் 3 பேர் பலி

Published on 31/08/2017 | Edited on 31/08/2017
விருதுநகர் அருகே கார் விபத்து அரசு அதிகாரிகள் 3 பேர் பலி

சிவகங்கை மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர்களாக பணியாற்றிய மேரியாழினி, கலைச்செல்வன், சுப்பிரமணியன் ஆகியோர், திருநெல்வேலியில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு சென்றுவிட்டு நேற்று மாலை அரசு காரில் திரும்பி கொண்டிருந்தனர். விருதுநகரை அடுத்த என்.ஜி.ஓ. காலனி அருகே, காரின் டயர் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ் மீது மோதியது. இதில் உதவி பொறியாளர்கள் மேரியாழினி, கலைச்செல்வன், டிரைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயம் அடைந்த சுப்பிரமணி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, விருதுநகர் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்