Skip to main content

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை; தொடங்கியது பங்காரு அடிகளாரின் இறுதி ஊர்வலம்

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

 21 shells ringing government honor; The funeral procession of Bangaru Adigar started

 

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கிப் புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார் (வயது 82). இவர் மாரடைப்பு காரணமாக நேற்று (19.10.2023) உயிரிழந்தார். அவரது மறைவு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில் தற்பொழுது அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு தொடங்கியது. 21 குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கில் தமிழக ஆளுநர், அமைச்சர் பொன்முடி, திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் உள்ளனர். பொதுமக்களும் அவரது பக்தர்களும் கூடியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்