2020ம் ஆண்டுக்கு 23 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் அடுத்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முழு ஆண்டு வங்கிக் கணக்கு முடிவு நீங்கலாக, அந்த ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட வேண்டும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளுடன் 23 நாட்களும் பொதுவிடுமுறை நாட்களாக கொள்ளப்படும் என்று தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள பொதுவிடுமுறையில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளை கழித்தால் 16 நாட்கள் பொதுவிடுமுறை கிடைக்கும். 2020 அரசு பொதுவிடுமுறை நாட்களில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை புதன்கிழமை வருகிறது. அதற்கு அடுத்த நாள் வியாழக்கிழமை 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை உழவர் தினம், அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.