Published on 30/06/2018 | Edited on 30/06/2018

மன்னார்குடி அசேஷம் பகுதியிலுள்ள ஒரு வங்கியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 6 லட்சம் மற்றும் 3 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடியதாக மணப்பாறை வங்கி ஊழியர் உட்பட 6 பேர் போலீசாரால் கைது செய்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

திருச்சி மணப்பாறையில் தமிழ்நாடு மெர்க்கடைல் வங்கியில் பணியாற்றிவந்த மரியாசெல்வம் என்ற ஊழியரிடம் நடத்திய விசாரணையில், அவர் பணிபுரிந்த மணப்பாறை வங்கி லாக்கரில் கொள்ளைக்கு பயன்படுத்திய இரண்டு துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தெரியவந்துள்ளது.
இதை அடுத்து லாக்கரில் இருந்த அந்த இரண்டு துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.