Published on 14/05/2025 | Edited on 14/05/2025

சென்னை புறநகர்ப் பகுதியான குன்றத்தூரில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இன்று குன்றத்தூரில் பல பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. மற்றும் பல இடங்களில் குறைந்த மின்னழுத்தம் கொண்ட மின்சாரமே விநியோகமானதால் மின்சாதன பொருட்கள் சரியாக இயங்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கோடை இரவு நேரத்தில் மின்விசிறிகள் குறைந்த மின்னழுத்தம் கொண்ட மின்சார விநியோகத்தால் சரியாக செயல்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இது தொடர்பாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு புகாரளிக்க தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட போதிலும் அழைப்பை யாரும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.