Published on 10/07/2019 | Edited on 10/07/2019
சென்னை புரசைவாக்கத்தில் 15 வயது சிறுமியை பெண்கள் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக புகார் எழுந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சென்னை புரசைவாக்கத்தில் வீட்டில் சண்டைபோட்டு வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுமிக்கு அடைக்கலம் தருவதாக கூறி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரில் ஜிபீனா பேகம், முபீனா பேகம், நிஷா ஆகியோரை கைது செய்து சென்னை புளியந்தோப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.