Skip to main content

என்.எல்.சி விபத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு!

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

Cuddalore NLC

 

கடலூர் என்.எல்.சி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த ஜுலை மாதம் 01-ஆம் தேதி 5-ஆவது அலகிலுள்ள கொதிகலன் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர்  தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.   

 

அவர்களில் நெய்வேலி நகரியம் 7-ஆவது வட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்ற துணைத் தலைமைப் பொறியாளர் 02.07.2020 அன்றும், இன்ட்கோசெர்வ் தொழிலாளி செல்வராஜ் என்பவரும், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் என்பவர் 05.07.2020 அன்றும், நிரந்தரத் தொழிலாளி வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் ஜோதி ராமலிங்கம், இன்ட்கோசெர்வ் தொழிலாளி தொப்புளிக்குப்பம் இளங்கோவன் ஆகியோர் 06.07.2020 அன்றும், நெய்வேலி நகரியம் வட்டம் 29-ஐ சேர்ந்த இன்ட்கோசர்வ் தொழிலாளி ஆனந்தபத்பநாபன் 07.07.2020 அன்றும், முதுநிலை தொழில்நுட்பப் பணியாளர் சுரேஷ் என்பவர் 12.07.2020 அன்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

 

இந்நிலையில் மேலும் 5-ஆவது அலகில் பணிபுரிந்து வந்த இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்தார். 

 

அதையடுத்து என்.எல்.சி கொதிகலன் வெடித்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 

 

அதேசமயம் 23 பேர் பாதிக்கப்பட்டதில் 6 பேர் சம்பவ இடத்திலும், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 17 பேரில் 9 பேர் சிகிச்சை பலனின்றி மருதுவமனையிலும் உயிரிழந்த நிலையில் 8 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.   

 

 

சார்ந்த செய்திகள்