Skip to main content

140 ஆண்டுகள் பாரம்பரிய பள்ளியை பாதுகாக்க மக்கள் வேண்டுகோள்!

Published on 06/06/2018 | Edited on 06/06/2018

புதுச்சேரி மிஷன் வீதியில்  வரலாற்று சிறப்புமிக்க COLLÈGE CALVÉ 'கொலேழ் கல்வே' என்று பிரஞ்சு மொழியிலும் 'கலவைக் கல்லூரி' என்று தமிழிலும் அழைக்கப்படும் 140 ஆண்டுகளை கடந்த பள்ளி உள்ளது.  கலவை சுப்பராய செட்டியார் என்ற ஒரு தனி மனிதர் புதுச்சேரி மக்களுக்கு அளித்தப் பெருங் கொடை. 

 

ஆயிரக்கணக்கான புதுவை வாழ் மாணவ மக்கள் கல்வி கற்ற COLLÈGE CALVÉ கலவைக் கல்லூரி 1877 ஆம் ஆண்டு முதல் இயங்குகின்றது. இதன் முதல் தலைமை ஆசிரியர் ஒரு கிருத்துவ பாதிரியார் ஆவார். இந்த பள்ளியில் பயின்றவர்கள் உலகம் முழுக்கப் பரவி வாழ்கின்றார்கள். பாவேந்தர் பாரதிதாசன் இந்த பள்ளியில் பயின்றவர். 1908 ஆம் அண்டு இந்த பள்ளியில் தமிழ்-பிரவே தேர்வினை எழுதி வெற்றி பெற்றவர். தமிழ் - பிரவே (BREVET DE LANGUE INDIGÈNE – B.I) , பின்னாட்களில் பிரஞ்சு - பிரவே ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்ற இப்பள்ளியின் மாணவர்கள் பிரஞ்சு புதுச்சேரி அரசுப் பணிகளில் அமர்ந்தனர். 

 

இப்பொழுது வாழும் அரசியல் சார்புடைய பலர் தனியார் பள்ளிகள் வைத்திருக்கின்றார்கள். அப்பொழுது தனியார் பலர் அரசுக்கென பள்ளிகள் அமைத்திருக்கின்றார்கள். பல கோடி மதிப்புள்ள இந்த கல்விக் கோயில் புதுவை அரசால்  தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாற்றுகின்றனர். 140 ஆண்டுகால புதுச்சேரி மக்களின் வரலாறு, வாழ்வியல் எல்லாம் கலந்த இந்த பள்ளி இன்னும் தொடர்ந்து ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் இந்த மண்ணிற்குப் பயன் படவேண்டும் என்றும், இந்தோ பிரஞ்சு மரபு  கட்டிட கலையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் இப்பள்ளியை  பராமரிக்கவும்,  புனரமைக்கவும்  மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்