Skip to main content

ஆன்லைனில் வெளிநாட்டு நாய் அனுப்புவதாக கூறி 1.30 லட்சம் மோசடி 

Published on 23/03/2018 | Edited on 23/03/2018
dog

 

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் திவ்யபிரியா(வயது 25). தனியார் மருத்துவ கல்லூரி செவிலியரான இவர், ஆன்லைன் மூலமாக டெல்லியில் ரூ. 1.30 லட்சம் பணம் செலுத்தி வெளிநாட்டு நாய் ஓன்று ஆர்டர் செய்தார். 15 நாட்கள் ஆகியும் நாய் வராததால், சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்ட போது எந்தவித பதிலும் வரவில்லை.

 

இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திவ்யபிரியா, பெரிய கடை காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தெரு நாய்களைப் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்த நகராட்சி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
municipality caught stray dogs and handed them over to the shelter

புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் தெரு நாய்களால் அடிக்கடி விபத்துகள், நாய்கள் கடித்தல், ஆடு, மாடு கால்நடைகளை கடித்து குதறிவிடுகிறது. அதனால் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பலரும் மனுக்கள் கொடுத்திருந்தனர்.

இந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து நகராட்சி ஊழியர்கள் 42 நாய்களை பிடித்திருந்தனர். இந்த நாய்களை வெளியிடங்களிலோ, காட்டுப் பகுதியிலோ இறக்கிவிடப்படும் போது மீண்டும் வந்துவிடும் என்பதால்  விராலிமலை ரோடு இலுப்பூர் தாலுகாவில் உள்ள பைரவர் நாய்கள் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரிக்க கேட்டுள்ளனர்.

இதே போல கிராமங்களிலும் ஏராளமாக சுற்றித்திரியும் நாய்களையும் பிடித்து காப்பகங்களில் வளர்க்கப்படுமானால், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் நாய்கள் கொல்லப்படாமலும் பாதுகாக்கப்படலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.