கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. மீடியாக்களில் 100க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருப்பதாகவும், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று செய்திகள் வெளியாகின. எடியூரப்பா ஆட்சி அமைக்கிறார். காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன என்று விவாதங்கள் நடந்தன.
இந்த நிலையில் காங்கிரஸ் 76 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால், 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாவும், அக்கட்சியின் தலைவர் குமாரசாமி முதல் அமைச்சராக இருக்கலாம் என்றும் காங்கிரஸ் அறிவித்தது. இதனை குமாரசாமி தரப்பும் ஏற்றுக்கொண்டது. தனது வேட்பாளர்களையும் உஷார்படுத்தியது.
இந்த திடீர் திருப்பதால் இந்தியாவின் கண்கள் அனைத்தும் கர்நாடகாவையே பார்த்துக்கொண்டிருக்கிறது. மோடி உள்பட பாஜக தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். என்ன செய்யலாம் என்று எடியூரப்பாவை குடைந்தனர். தற்போதைய நிலவரப்படி 100 தொகுதிகளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. ஆகையால் அனைத்து தொகுதிகளிலும் ரிசல்ட் வரட்டும், அதன் பிறகு பேசுவோம் என கூறியிருக்கிறாராம் எடியூரப்பா.