Published on 21/02/2020 | Edited on 21/02/2020
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டக் களத்தில் கலந்துகொண்டது மட்டுமில்லாமல், அதில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து அசத்தியுள்ளார் மதிவர்ஷனி எனும் குழந்தை.
தனது பேச்சை தொடங்கும் போதே எனது முஸ்லீம் சகோதர சகோதரிகளே என தொடங்கி, என்னுடைய பெயர் மதிவர்ஷனி, நான் படிக்கின்ற பள்ளி ஒரு இந்து பள்ளி, ஆனால் அந்த பள்ளியில் 90 சதவீத முஸ்லீம்கள்தான் படிக்கிறார்கள். அதே போலத்தான் நாங்க குடியிருக்கும் ஏரியா, முஸ்லிம் ஏரியா, ஆனால் நாங்க இரண்டே குடும்பத்தின் இருக்கிறோம். நாங்களும் அவர்களும் வேறு வேறு என்று இல்லாமல் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். எங்களை ஏன் பிரிக்க பார்கிறார்கள்.
இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களுக்கு குடியுரிமை இல்லை என்று சொல்லுரீங்களே, அரபு நாட்டில் இருக்கும் இந்துக்களை என்ன விரட்டியா விட்டுட்டாங்க? இந்தியா எம்மதமும் சம்மதம் உள்ள நாடு என்று அடுக்கு அடுக்காக பேசி அனைவரையும் திரும்பி பார்கவைத்தார் சிறுமி. இந்த செய்தி சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.