Skip to main content

வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டப பூமி பூஜை... ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. புறக்கணிப்பு!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
thoothukudi

 

வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத் தளபதிகளில் ஒருவரான மாவீரன் சுந்தரலிங்கத்திற்கு அவரது பிறந்த ஊரான கவர்னகிரியில் ஏற்கனவே மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை ரூ.75 லட்சம் ரூபாய் செலவில் தமிழக அரசு புனரமைக்க உள்ளது.

 

புனரமைப்பு பணிகளைச் செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ 19-06-2020 அன்று தொடங்கி வைத்தார். அவருக்கு முன்னதாக பூரண கும்ப மரியாதை அளித்து அசத்தினர் விழாக்குழுவினர். ஒட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. சின்னப்பன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், தொகுதி எம்.எல்.ஏ. சண்முகய்யா (தி.மு.க) இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. 

 

இதுகுறித்து அவரிடம் தொடர்பு கொண்டு பேசினோம். “இந்த விழாவுக்கு எனக்கு நேற்று பி.ஆர்.ஓ. அழைப்பு விடுத்தார். பெரும்பாலும் அ.தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்கும் விழா அரசு விழா போல் நடைபெறுவதில்லை. அதிகாரிகளும் அ.தி.மு.க. நிர்வாகிகளையே முன்னிறுத்துகின்றனர். அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை” என்கிறார்.

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., அவரது தொகுதியில் நடக்கும் அரசு விழாவைப் புறக்கணித்திருக்கிறார் என்று தான் அர்த்தம் என விழாவுக்கு வந்தவர்கள் கூறுகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்