சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ராஜலட்சுமி பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், எங்கள் கட்சியோடு பாஜக, பாமக, தமாகா, புதிய பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணி வைத்துள்ளது. மேலும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு கொடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த ஆட்சிகாலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். ஆகையால் பொதுமக்கள் எங்களை ஆதரிப்பார்கள். கடந்த முறையைவிட அதிக தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்று பெறும்.
2011ல் பேன், மிக்சி, கிரைண்டர் கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார் ஜெயலலிதா. கொடுக்க முடியமா என எல்லோரும் கேள்வி எழுப்பினார்கள். அந்த ஆட்சி முடிவதற்குள் அனைவருக்கும் சொன்னதைப்போல் அவைகள் கொடுக்கப்பட்டது. 2016ல் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அறிவித்தார். அப்போது அதனை அனைவரும் சாத்தியமில்லை என்றார்கள். அதனை செய்து காட்டினார்கள். அதேபோல் தாலிக்கு தங்கம் திட்டத்தை செய்ய முடியாது என்றார்கள். அதனையும் செய்து காட்டினார்கள். அதேபோலதான் தற்போது அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ளதை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் செய்து கொடுப்பார்கள். நிறைவேற்றுவார்கள்.
பசுமை திட்டம், பி.எம். வீடு திட்டம், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம் என உள்ளது. இதனை செயல்படுத்தி அனைவருக்கும் வாசிங்மெசின் கொடுப்போம். தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை அதிமுக நிறைவேற்றும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றார்.