Skip to main content

முதல்வரை சந்தித்து விட்டுத்தான் கிளம்புவேன்... 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த டிஆர்பி ராஜா

Published on 28/08/2020 | Edited on 28/08/2020

 

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று கரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். நேற்று காலையில் கடலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு நடத்தி விட்டு மாலையில் நாகை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். கடலூர், நாகை மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.  

 

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்துகிறார். 

 

திருவாரூரில் நடைபெறும் இந்த அரசு நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மன்னார்குடி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜாவுக்கு அழைப்பிதழ் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். இருந்தும் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வில் முதலமைச்சரை சந்தித்து தன்னுடைய சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றக்கோரி முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க சுமார் இரண்டு மணி நேரமாக காத்திருக்கிறார். எத்தனை மணி நேரம் ஆனாலும் முதலமைச்சரை சந்தித்து விட்டுத்தான் இந்த இடத்தை விட்டு கிளம்புவேன் என டிஆர்பி ராஜா உறுதியாக அங்கேயே இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்