தமிழகம் பாஜக கையில் சிக்கிக்கொண்டதால் ஜனநாயகம் என்பது முற்றிலும் நசுக்கப்பட்டுவிட்டதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியிருக்கிறார்.
பல்வேறு வழக்குகள் தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழர்கள் உரிமை சார்ந்து அனுமதி பெற்று அமைதி வழியில் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு கூட அரசு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து வழக்குகள் நீதிமன்றத்தில் வந்திருக்கின்றன. இந்த வழக்குகள் பொய்யான வகையில் புனையப்பட்டது. தமிழர்கள் உரிமைகள் சார்ந்து ஜனநாயக வழியில் நாம் குரலை பதிவு செய்தாலே வழக்குகள் பதிவு செய்யக்கூடிய ஒரு மோசமான அடக்குமுறை சூழலை பார்க்க முடிகிறது. கருத்துரிமை முழுமையாக இங்கு மறுக்கப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கழுத்தை நெறிக்கக்கூடிய சூழல் என்பது அரசியல் சாசன விரோதமாக இருக்கிறது.
தமிழகத்தில் பாஜகவைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நீதியும், மற்றவர்களுக்கு ஒரு நீதியும் இருக்கிறது. பாஜகவின் மறைமுக அடக்குமுறைகளை 28ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிச்சம்போட்டு காட்ட இருப்பதாக கூறினார்.