Skip to main content

தஞ்சை குடமுழுக்கு விழாவில் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை.... கைது செய்யப்பட்ட கௌதமன் பேட்டி...

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சென்னையில் இருந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்ற தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும் இயக்குனருமான கௌதமன் மற்றும் அவருடன் வருகை தந்த இருவரையும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில்  போலீசார் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கௌதமன் கைது செய்யப்பட்டார்.
 

- ulundurpet -



 

அப்போது கௌதமன் கூறுகையில், தஞ்சையில் நடைபெறும் குடமுழுக்கு விழாவில் மதுரை கிளையின் உத்தரவை மீறி தமிழ் மரபுகளை மறைத்துள்ள இந்து அறநிலை துறையை கண்டிக்கிறோம். தமிழில் குடமுழுக்கு செய்கிறார்களா என்று அறிய தஞ்சை பெரிய கோயில் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது போலீசார்  விசாரணை நடத்துவதற்காக அழைத்தனர். பின்னர் கைது செய்வதாக தெரிவித்தனர்.
 

கோவில் வாசலில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த குடமுழுக்கு சடங்குகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. உதாசினப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளை கொடுத்த தீர்ப்பின்படி அங்கு நடக்கவில்லை. 
 

கோபுர கலசம் மற்றும் கருவறையிலும் நடக்கிற சடங்குகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஐந்து இடங்களில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் கோபுர கலசம் இருக்கும் இடத்திலும், கருவறையிலும் கட்டாயம் அனுமதிக்கப்போவதில்லை. ஏனென்றால் கோபுர கலசம் இருக்கும் இடத்தில் சமஸ்கிருதம் ஓதுபவர்கள் நான்கு பேரை மட்டுமே வைத்து நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். ஏனென்றால் 216 அடி உயரத்தில் இருக்கும் அந்த இடத்திற்கு செல்ல அவர்களுக்கு மட்டும்தான் மருத்துவச் சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேறு யாருக்கும் கொடுக்கப்பட வில்லை. 


 

 

300க்கும் மேற்பட்டவர்கள் சமஸ்கிருதத்தை ஓதுவதற்கு இருக்கிறார்கள். அத்தனைப் பேருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 20 சிவனடியார்களுக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்படவில்லை. உள்ளே போனால் அவர்கள் மறுக்கப்படுகிறார்கள். 20 பேருக்கு அடையாள அட்டையே தராமல் எப்படி கோபுர கலசத்தில் ஏற்றுவீர்கள். இது நேர்மையற்ற செயல். நீதிமன்ற தீர்ப்பை அவர்கள் ஏற்கவில்லை. 
 

உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி என்ற இடத்தில் எங்களை போலீசார் வழிமறித்துள்ளனர். விழுப்புரம் போலீசார் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்கின்றனர். என்னை கைது செய்தாலும் பரவாயில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்றால் என்னைப்போன்ற பல தமிழர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாவட்டர்கள். இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்