Published on 11/05/2019 | Edited on 11/05/2019
மதுரையில் இன்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க. தமிழ்செல்வன், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சியை கலைக்க சட்டப்பேரவையில் வாக்களிப்போம். அதிமுக ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் சேர்ந்து வாக்களித்தவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்று கூறினார். அண்மையில் அவர் பல அதிரடி கருத்துகளை கூறி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.