'வெளிநாடு போய்விட்டு சரியான முதலீடு இல்லை என்று சொன்னால் அதனை நாம் வரவேற்க முடியாது' என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''எந்த சட்டங்களாக இருந்தாலும் சரி. மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிவிக்கும். நிதியை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கும். அந்தந்த மாநிலங்கள் அதை நடைமுறைப்படுத்தும். இதுதான் நடைமுறை. மத்திய அரசு திட்டங்களுக்கான அந்த நிதியை முறையாக செயல்படுத்தும் அரசாங்கமாகத்தான் எல்லா மாநிலங்களும் இருக்க வேண்டும்.
முதலமைச்சர் வெளிநாடு போவதை யாரும் கிரிட்டிசைஸ் பண்ண முடியாது. வெளிநாடுகளுக்கு போய் வந்து எவ்வளவு முதலீடுகளை கொண்டு வந்தார்கள், எவ்வளவு வேலை வாய்ப்புகள் வந்தது என்பதில் சரியான தகவல் இருந்தால் அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் வெளிநாடு போய்விட்டு சரியான முதலீடு இல்லை என்று சொன்னால் அதனை நாம் வரவேற்க முடியாது. நம்ம பிரதமர் வெளிநாடு போனா நீங்க எல்லாம் பத்திரிகையில் பார்த்திருப்பீங்க.., அமெரிக்க அதிபராக இருந்தாலும் சரி.., நமது பிரதமர் பார்க்காமல் போனால் கூட கூப்பிட்டு கை கொடுக்கும் அளவிற்கு நமது தரத்தையும் பெருமையையும் கொடுத்திருப்பது பிரதமர் மோடி மட்டும்தான்'' என்றார்.