Skip to main content

திருச்சி மாநாடு தேதியை அறிவித்த ஸ்டாலின்...!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

Stalin announces Trichy conference date

 

தி.மு.க.வினரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, திருச்சி திமுக மாநாடு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் இடையே இருந்தது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் அன்று மாநாடு நடைபெறும் என்றும் பல்வேறு வதந்திகள் கிளம்பி பரவிக்கொண்டிருந்தது.

 

அதற்கு விடை கிடைக்கும் விதமாக இன்றைய ஸ்டாலின் பிரச்சாரம் அமைந்தது. இன்று (18.02.2021) ஸ்டாலின் தேனியில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது பேசுகையில், “நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த திமுக மாநாடு, மார்ச் மாதம் 14ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது,” என்று கூறினார். மேலும் “அதில் ஒவ்வொருவரும் வந்து பங்கேற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்பதை உங்கள் வருகையின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

 

சார்ந்த செய்திகள்