தேனி பாராளுமன்ற வேட்பாளர் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் ஓட்டுக்கு ரூ. 5000 வரை உசிலம்பட்டியில் பட்டுவாடா செய்த வீடியோ ஆதாரத்துடன் ஆட்சியரிடம் புகார்.
நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 18-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் நாளை மாலையுடன் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களும் முடிகின்றது. ஏற்கனவே பல இடங்களில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்துவருவதாக தகவல்கள் வருகின்றது. அதேசமயம் பணப்பட்டுவாடாவை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் ஆவணங்கள் இன்றி பணம் பறிமுதல் செய்யப்பட்ட இடத்தில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு வாக்களிக்குமாறு பணப்பட்டுவாடா நடக்கும் காணொலிக் காட்சி வெளியாகியுள்ளது.
தேனி பாராளுமன்ற வேட்பாளர் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார் ஓட்டுக்கு ரூ. 5000 வரை உசிலம்பட்டியில் பட்டுவாடா செய்யபட்டுள்ளது. அதை கையும் களவுமாக வீடியோ ஆதாரத்துடன் மதுரை ஆட்சியரிடம் பார்வர்டு பிளாக் பொருப்பாளர் கனேசன் புகாராக கொடுத்துள்ளார். மேலும் அவர் தெரிவித்தாவது, “ஆர்த்தி எடுப்பவர்களுக்கு தட்டுகளில் ரூ. 500, ரூ. 1,000 என வழங்கப்படுகிறது இவை அனைத்தும் காவல்துறையின் உதவியுடன் நடந்துகொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். அதேசமயம் ரவீந்திரநாத் குமாரை உடனடியாக தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.