விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்ததால் அவர் வகித்து வந்த பதவியை செங்கோடையன் அல்லது சேவூர் ராமச்சந்திரனிடம் ஒப்படைக்க ஆலோசனை நடத்தி வருகிறார் முதல்வர்.
கடந்த 1998ம் ஆண்டு பாலகிருஷ்ணா ரெட்டி பா.ஜ.க.வில் இருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் மற்றும் பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் தற்போது தமிழக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.
இதையடுத்து அவர் இன்று இரவு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா கடிதம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணா ரெட்டி வகித்து வந்த விளையாட்டுத்துறை பொறுப்பை செங்கோட்டையன் அல்லது சேவூர் ராமச்சந்திரன் வசம் ஒப்படைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அமைச்சரவையுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.