நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தோற்கும். சட்டமன்ற இடைத்தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சி நீடிக்க முடியாத நிலை அதிமுகவுக்கு வரும். அந்த தோல்விக்கு அமமுக காரணமாக இருக்கும் என்று அக்கட்சியினர் கூறி வந்தனர்.
அதிமுக ஆட்சி மீது கடுமையான அதிருப்தி இருந்ததால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது என்றால் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகம்தான். அவர் நாடாளுமன்றத் தேர்தலைவிட இடைத்தேர்தலில் தான் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் தினகரனை சந்திப்பதற்காக சசிகலா டெலிபோனில் தொடர்பு கொண்டு பெங்களூருவுக்கு வருமாறு அழைத்துள்ளார். அந்த அழைப்புக்கு எந்த பதிலும் சொல்லாமல் தினகரன் இருந்துள்ளார். இது சசிகலாவை கடுமையாக கோபப்படுத்தியுள்ளது. விரைவில் தினகரனுக்கு எதிராக அறிக்கைகள் பெங்களூவில் இருந்து வரும் என மன்னார்குடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.