சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ளார். இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே தண்டனை உள்ளது என்கின்றனர். மேலும் வருகிற 2021 சட்ட மன்ற தேர்தலில் தீவிர அரசியலில் ஈடுபட சசிகலா திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதேபோல் வரும் தேர்தலில் தினகரனை நம்பாமல் எடப்பாடியை தனது பக்கம் இழுக்க சசிகலா முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் வரும் தேர்தலில் ரஜினி கட்சி ஆம்பித்தால் அதிமுகவை கழட்டிவிட்டு ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக திட்டம் போடும் என்கின்றனர். அப்படி நடக்கும் நேரத்தில் எடப்பாடியை தன் பக்கம் இழுக்க தனது விசுவாசிகளை களத்தில் சசிகலா இறக்கியுள்ளதாக சொல்கின்றனர். அந்த முயற்சி தோல்வி அடைந்தால் அதிமுகவில் தேர்தலில் சீட் கிடைக்காமல் இருக்கும் அதிருப்தி நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்க சசிகலா தீவிரமாக இறங்கியுள்ளார். சசிகலாவின் இந்த திட்டத்தால் அதிமுக தலைமை கடும் அப்செட்டில் இருப்பதாக கூறுகின்றனர். இதனால் நிர்வாகிகள் யாரும் கட்சியை விட்டு போகாமல் இருக்க ஒரு சில திட்டத்தை அதிமுக கையில் எடுக்கும் என்கின்றனர்.