Published on 09/09/2019 | Edited on 09/09/2019

கடந்த 2012ம் ஆண்டு இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் என்ற குறும்படத்தை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. இந்த ஆர்ப்பாட்டம் அரசின் அனுமதி இல்லாமல் நடைபெற்றது என பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று வந்தது. இந்த வழக்கு விசாரணை வரும் 11.11.2019க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, தமுமுக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனீபா உள்பட பலர் ஆஜரானார்கள்.