மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் 100 கோடிக்கு அதிகமான திட்டங்கள் செயல்படுத்த குழு ஒன்று தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கு தலைவராக முதல்வர் என்னை நியமித்துள்ளார். அந்தக் குழுவிற்கும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும். அந்த கூட்டம் 29 ஆம் தேதி நடந்தது.
அந்தக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் செயல்திறனை அதிகரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளேன். மகளிருக்கு உரிமைத் தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85% நிறைவடைந்துள்ளது. 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்” எனக் கூறினார்.