Published on 21/06/2022 | Edited on 21/06/2022

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்தான விவாதங்கள் நடந்து வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம் ஒற்றைத் தலைமைக்கு மறுப்பு தெரிவித்தும், எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமைக் கொண்டுவருவது குறித்து தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஓ.பி.எஸ் இன்று சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், இன்று மாலை நேரத்தில் ஓ.பி.எஸ். இல்லத்தின் வெளியே அதிமுக தொண்டர்கள் இல்லாமல் வெறிச்சோடியிருந்தது.