Skip to main content

எதிர்க்கட்சியாக இருந்தால் மோதி பார்க்கலாம்... ஓபிஎஸ் கை ஓங்கிவிடக் கூடாது... ஓபிஎஸ்ஸிற்கு எதிரான அரசியல்!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020


ஆளுங்கட்சி அரசியலை வைத்து சம்பாதித்தவர்களெல்லாம் ஒதுங்கிவிட்டார்கள். இவரோ, வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்காகச் செலவழிக்கிறார்'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஒரு அ.தி.மு.க தொண்டர்.

யார் அந்த நல்லவர்? விருதுநகரில் பிறந்து கோவையில் தொழில் செய்துவரும் கோகுலம் தங்கராஜ் என்பவர், 2018-ல் விருதுநகரிலுள்ள நிறைவாழ்வு நகர் என்ற இடத்தில், தன் சொந்தச் செலவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், பொது மக்களின் பயன்பாட்டிற்காகப் பாலம் கட்டிக் கொடுத்தார். அப்போது கட்சி சார்பற்ற, இளைய தலைமுறை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி, பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
 


 

 

admk


தற்போது, "விருதுநகர் முனிசிபாலிடி சேர்மன் சீட் உங்கள் மனைவி மாலா தங்க ராஜுக்குத்தான்'...’ என்று அதிமுக தரப்பில் உத்தரவாதம் அளித்திருக்கும் நிலையில், இந்த ஊரடங்கு நேரத்தில், விருதுநகரின் அத்தனை வார்டுகள் மீதும் கரிசனம் கொண்டு, நிவாரண உதவிகளை நேரடியாக வழங்க ஆரம்பித்தார் தங்கராஜ். இது, "அமைதிப்படை அமாவாசை' ரேஞ்சுக்கு பேசப்படும் உள்ளூர் அதிமுக நிர்வாகி ஒருவருக்குப் பிடிக்க வில்லை. அடுத்த சேர்மன் தனது கைக்குள் அடங்கியவராக இருக்கவேண்டும்’ என்று ஒருவரது மனைவியை மனதுக்குள் தேர்வு செய்துவிட்டு, தங்கராஜுக்கு எதிராகத் தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார்.

அமாவாசை’ தரப்பினர் தூண்டுதலின் பேரில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம், கோகுலம் தங்கராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது. ஊரடங்கு விதிகளை மீறி விடுதி ஒன்றில் தங்கியபடி, அ.தி.மு.க.வினரை வைத்து தங்கராஜ் கூட்டம் நடத்துகிறார். திருப்பூருக்கும் விருதுநகருக்கும் அடிக்கடி தங்கராஜ் வந்து செல்வது எப்படி?’ என்று புகாரில் கேள்வி எழுப்ப, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தங்கராஜுவை அறிவுறுத்தி அனுப்பியிருக்கிறது.
 

http://onelink.to/nknapp


 

admk


நாம் கோகுலம் தங்கராஜுவை தொடர்பு கொண்டோம். "எதிர்கட்சியினர் என்றால் மோதிப் பார்க்கலாம். ஏழைகளுக்கு நல்லது செய்வதைச் சொந்தக் கட்சியிலேயே எதிர்க்கிறார்கள். என்ன செய்வது? 2017-ல் இருந்தே, இங்கே விருதுநகரில் ஆர்.ஆர்.நகர், கல்போது, கன்னிசேரி புதூர் போன்ற பகுதிகளில், மக்கள் நலத்திட்டங்களை என்னால் முடிந்த அளவுக்கு செய்து வருகிறேன். என்னை கட்சிக்கு கொண்டுவந்தது பிடிக்கவில்லை என்றால் அமைச்சரிடமே நேரடியாகச் சொல்லியிருக்க வேண்டியதுதானே? மக்களுக்கு கொடுப்பதைத் தடுக்கும் அரசியலை ஏன் பண்ண வேண்டும்?'' என்று வருத்தப்பட்டார்.

"துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் நெருக்கமானவர் தங்கராஜ். தங்கராஜுவுக்கு எதிராகச் சிலர் கிளம்பியிருப்பதை, ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிரான அரசியலாகவே பார்க்க வேண்டியதிருக்கிறது. தென் மாவட்டத்தில் ஓ.பி.எஸ். கை ஓங்கிவிடக்கூடாது என்று முளையிலேயே கிள்ளி எறியப் பார்க்கின்றனர்''’ என்றார் அந்த சீனியர். அரசியலில் எல்லாமே ஒரு கணக்கோடுதான் நடக்கிறது!


 

சார்ந்த செய்திகள்