Skip to main content

''ஓராண்டு சாதனையில் இதுவும் ஒன்றா?''-வைரலாகும் ஈபிஎஸ் ட்வீட்!

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

'' Is this one of the one-year achievements? '' - EPS's tweet goes viral

 

ஆன்லைன் சூதாட்டத்தால் அம்பத்தூர் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துகொண்டது நெஞ்சை உலுக்குகிறது என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் உள்ள மத்திய தொலைத்தொடர்பு பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு காவலர் சரவணகுமார் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார் இதுதொடர்பாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது தற்கொலை செய்துகொண்ட சரவணகுமாரின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

சம்பவ இடத்தில் அம்பத்தூர் துணை ஆணையர் மகேஷ், காவல் உதவி ஆணையர் கனகராஜ் உள்ளிட்ட போலீசார் காவலர் சரவணகுமாரின் தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் சரவணகுமார் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.

 

இந்தநிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'இன்று (7.5.2022) ஆன்லைன் சூதாட்டத்தால் அம்பத்தூர் ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் தற்கொலை செய்து கொண்ட செய்தி நெஞ்சை உலுக்குகிறது. உயிரைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டம் குறித்த வழக்கில் கோட்டை விட்ட இந்த விடியா அரசு, உரிய தடை சட்டத்தை கொண்டு வராதது ஏன்? இன்னும் எத்தனை உயிர் போகும்வரை காத்திருக்க போகிறீர்கள்? ஓராண்டு சாதனையில் இதுவும் ஒன்றா?'' என தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்