Skip to main content

எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் மெரினாவில் கூடுவோம்! திருமாவளவன் பேட்டி!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

 

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவசர ஆலோசனை கூட்டம் சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், தொல் திருமாவளவன், திருமுருகன் காந்தி, மல்லை சத்யா, ஜவாஹிருல்லா, முத்தரசன், சுப வீரபாண்டியன், வ.கெளதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


 

tamizhar vazhvurimai kuttamaipu



ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் பேசிய திருமாவளவன், ''நெல்லை கண்ணன் மிகச்சிறந்த பேச்சாளர். நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசியுள்ளார். எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அதேபோல்தான் அமித்ஷாவைப் பற்றி நகைச்சுவையாக கூறினார். அதை அனைவரும் சிரித்து விட்டு பின்னர் கலைந்து சென்று விட்டனர்.



மெரினாவில் யாரும் நான்கு பேருக்குமேல் கூட முடியாது. ஆனால் பாஜகவினர் பேரணியே நடத்தியுள்ளனர். காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை. பாஜகவினருக்கு அஞ்சுகிறதா தமிழக அரசு என எண்ணத்தோன்றுகிறது. நெல்லை கண்ணன் அதிகாரமாக பேசவில்லை. அவர் அதிகாரத்தை பறித்து விடுங்கள் என்று தான் பேசினார். இதுவரை பலமுறை எச்.ராஜா நேரிடையாக தாக்கி பேசியுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களை போலவே மெரினாவில் கூடுவோம் என எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம் என்றார்.  


 

 

சார்ந்த செய்திகள்