Skip to main content

முன்பே கணித்த நக்கீரன்! 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

Published on 14/12/2022 | Edited on 14/12/2022

 

Nakkeeran predicted earlier; 11 Change of portfolios of Ministers

 

கடந்த 8/12/22 அன்று நக்கீரனில், ‘திமுகவின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 35 பேர் அமைச்சர்கள் ஆகலாம். ஆனால், இதுவரை 34 பேர் தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள். உதயநிதிக்காக ஏற்கனவே திட்டமிட்டு 35 வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் 35 ஆவது அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்கிறார். அவருக்குத் தற்போது மெய்யநாதன் வகித்துவரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்படுகிறது. மெய்யநாதனுக்கு அவரிடம் மீதம் இருக்கும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்படுகிறது.

 

அத்துடன் தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித் துறையும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறையும் ஒதுக்கப்படுகிறது. மேலும், உணவுத் துறை அமைச்சரான சக்கரபாணி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய மூர்த்தி ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளன. இதில் சக்கரபாணியின் உணவுத் துறையை மாற்ற வேண்டாம் என முதல்வரே சொல்கிறாராம்.

 

மெய்யநாதனிடம் மிஞ்சி இருக்கும் சுற்றுச்சூழல் துறையையும் உதயநிதியிடமே கொடுத்துவிடலாம். அதற்குப் பதில் வணிக வரித்துறை அமைச்சராகவும், புதுக்கோட்டை மாவட்டத்தைப் பிரித்து ஆலங்குடி, புதுக்கோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டத்தை உருவாக்கி மெய்யநாதனை திமுக மாவட்டச் செயலாளராக அறிவிக்கலாமா என்கிற ஆலோசனையும் முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது’ என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், தற்போது தமிழக அமைச்சரவையில் சிலரது இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித் துறையும் பஞ்சாயத்துத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிற்படுத்தப்பட்டோருக்கான துறையின் அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக காதி துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். 

 

அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் இருந்த புள்ளியல் துறை பழனிவேல் தியாகராஜனிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர்பாபுவிடம் கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இத்துறை அமைச்சர் முத்துசாமியிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்